Wednesday, October 19, 2016

இப்படி நடந்தால்....

  • ஒரு திட்டத்தின் கெடு உருவாக்கி அதனை கடைபிடிப்பத்தில் சிறந்தவராக மாறினால் .... 

  • ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு உதவினால்....

  • முன் வரிசையில் உட்கார்ந்தால்....

  • ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு கடின கேள்வி கேட்டால்... 

  • அதிகமாக கொடுத்து குறைவாக எடுத்துகொண்டால்...
 
  • ஒரு புதிய யுத்தியை கற்றுக் கொண்டால்...

  • ஏன் என்று கேட்டால்....

மேற்சொன்ன அனைத்துமே  நாம் தேர்ந்தெடுக்கும் விடயங்கள். மற்றவர்கள் நமக்காக தேர்ந்தெடுக்கவோ அல்லது நமக்கு அனுமதி அளிக்கவோ தேவையில்லை.

ஒவ்வொரு முறையும் வெளி நிகழ்வு நடந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் நான் மூழ்கும் பொழுது, என் கட்டுபாட்டுக்குள் இருப்பவற்றில் குறி வைப்பதே நன்று என்பதை உணர்கிறேன்.

This blog is a Tamil Translation of Seth Godin's Blog "What would happen..." published on October 13, 2016. Translated with his permission. Follow this link to read his English version



      

Friday, June 19, 2015

புரிந்துகொள்ளுதல் கடினம்

சில நேரங்களில் நாம் நமது கருத்தினை அடைய விறுவிறுப்புடன் செயல்பட்டு, புரிந்துகொள்ளுவதற்கு தேவையான வேலையைச் செய்யாமல் விட்டுவிடுகிறோம். ஏன் அது இவ்வாறு இருக்கிறது? ஏன் அவர்கள் அதனை அவ்வாறு நம்புகின்றார்கள்? 

நாம் முழுவதுமாக படிப்பதை விட்டுவிடுகிறோம். ஏன் என்றால் எழுத்தாளர் என்ன சொல்லவருகின்றார் என்ற நமது எண்ணத்திற்குத் தாவுவது எளிதாகின்றது. 

நாம் நம் வாடிக்கயாளர்களிடம் ஈடுபாடு கொள்வதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாம் அறுதியிட்டு வேகமாக சொல்லிவிடலாம். 

நாம் ஒரு கணக்கினை முடிக்கவோ, அடிக்குறிப்புகளை படிக்கவோ, ஆய்வுச் சோதனையை மீண்டும் செய்வதையோ தவிர்க்கிறோம். ஏன் என்றால் நாம் நினைத்த முடிவு வராமல் போகலாம். 

நாம் விரைவாக ஓடுகின்றோம். ஏன் என்றால் முதலாவதாக, சத்தமாக, சினத்துடன் வரும் உரத்த குரல் கூட்டத்தை திசை திருப்பலாம். 
ஆம், இவையெல்லாம் இப்பொழுது எளிதாக சாத்தியாமாகிறது. ஏன் என்றால் நாம் ஒவ்வொருவரும் நம் ஊடக நிறுவனங்களின் முதலாளிகள். 

This blog is a Tamil Translation of Seth Godin's Blog "The hard work of understanding" published on Jan 4, 2014. Translated with his permission. Follow the link to read his English version.